Adirai pirai
articles

நிஃபா வைரஸ் வதந்தி… மருந்து நிறுவனங்களின் சூழ்ச்சி!

புதிய வைரஸ் பீதியை கிளப்பி கொள்ளையடிக்க புறப்பட்டு விட்டது. மருந்து நிறுவன மாஃபியா கும்பல். வௌவால்கள் மூலம் தான் இந்த வைரஸ் பரவுகிறது என்று செய்தியை பரப்புகின்றனர். இந்த வைரசை தடுப்பதற்கு தடுப்பூசி இல்லை மருந்தும் இல்லை என்று WHO – உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது.

உடன் சர்வதேச மருந்து மற்றும் தடுப்பூசி ஆராய்ச்சி நிறுவனங்கள் சுறுசுறுப்பாகி விட்டன. இன்னும் எத்தனை காலத்திற்குத்தான் இப்படி ஏழை நாடுகளை….மக்களை ஏமாற்றி வஞ்சித்து கொள்ளையடிக்கப் போகிறார்களோ தெரியவில்லை. கெட்டிக்காரன் புளுகு எட்டு நாளைக்கு என்று சொல்லிக்கொள்வதை தவிர இப்போதைக்கு வேறு வழி இல்லை.

வௌவால்கள் பூக்களின் மகரந்த சேர்க்கைக்கும், பழவிதைகளை வெவ்வேறு இடங்களில் தூவி தாவரங்கள் பெருகுவதற்கும் உதவுகின்றன. மணிக்கு ஆயிரம் சிறுபூச்சிகள் வரை சாப்பிடும். வயல்களைத் தாக்கும் பூச்சிகளை அழிப்பதால் விவசாயியின் நண்பனாக வௌவால் உள்ளது. எண்டோ சல்பான் பூச்சி கொல்லியை தடை செய்துள்ள கேரளா மீது இன்னும் இதுபோல தாக்குதல் ஏராளமாக வரும்.

இறையச்சமுடைய, இறைவனுடைய படைப்புகளான மனித குலத்தின் மீதும் இந்த பூமியின் மீதும் பற்றும் பாசமும் கொண்ட. முதலாளித்துவ சூழ்ச்சிகளின் மூலத்தை அறிந்த….

•குர்ஆன் ஹதீஸ் மற்றும் அரபு ஆங்கிலம்

புலமையுடைய அறிஞர்கள் – 5 பேர்

•நுண்ணுயிரியல் வல்லுநர்கள் ( MICRO BIOLOGIST ) – 5 பேர்

•அலோபதி மருத்துவர்கள் -5 பேர்

•சித்த மருத்துவர்கள் – 5 பேர்

•ஆயுர்வேத மருத்துவர்கள் – 5 பேர்

•தாவரவியல் வல்லுநர்கள் – ( BOTONIST ) 5 பேர்

•விலங்கியல் வல்லுநர்கள் – ( ZOOLOGIST ) 5 பேர்

•பறவையியல் வல்லுனர்கள் – ( ORNITHOLOGIST ) 5 பேர்

• ஒரு நவீன உபகரணங்களைக்கொண்ட

உலகத்தரமான ஆய்வகம்.

இவர்கள் கூடி ஆய்வகத்தில் அமர்ந்து குர்ஆன் ஹதீஸ் மற்றும் இயற்கை பாரம்பரிய மருத்துவ வழியில் ஆய்வு செய்தால், இரண்டு மூன்று நாட்களில் இந்த வைரசுக்கு மருந்து

கண்டுபிடித்து மருந்து நிறுவன மாஃபியா கும்பலின் பேராசைகளுக்கு ஆப்பு அடிப்பார்கள்.

குர்ஆன் ஹதீஸை படித்த இத்தகைய துறை சார்ந்த நிபுணர்களை எப்போது உருவாக்குவது…..?

கருத்துக்கு மாற்று கருத்துடையவர்களை FBயில் கலங்கடிப்பதிலேயே இளைஞர்களின் காலம் முடிந்துவிடும் போல இருக்கிறதே……( எல்லோரும் அல்ல)

-CMN Saleem