Adirai pirai
posts

அதிரை கடற்கரைத்தெருவில் தண்ணீர் விநியோகம் இல்லை… பேரூராட்சியில் தீனும் இஸ்லாம் சங்கத்தினர் கோரிக்கை!

அதிரை கடற்கரைத்தெருவில் கடந்த 2 நாட்களாக பேரூராட்சியால் முறையாக தண்ணீர் விநியோகம் செய்யப்படாததால் அப்பகுதி மக்கள் கடும் துயரங்களுக்கு ஆளாகியுள்ளனர். எனவே முறையான தண்ணீர் விநியோகத்தை வழங்கக்கோரியும், அப்பகுதியில் தொடர்ந்து நிலவி வரும் சுகாதார பிரச்சனைகளுக்கு தீர்வு காண வலியுறுத்தியும் கடற்கரைத்தெரு தீனுல் இஸ்லாம் இளைஞர் சங்கத்தினர் அதிரை பேரூராட்சி அலுவலகம் சென்று கோரிக்கை மனுவை வழங்கினர்.