Adirai pirai
உள்ளூர் செய்திகள்

அதிரை தனியார் பேருந்தில் ஒலித்த ஆபாச பாடல்கள்… முகம் சுளித்த பெண்கள்!

இன்று மாலை அதிராம்பட்டினத்திலிருந்து பட்டுக்கோட்டைக்கு தனியார் நகர பேருந்தில் பயணம் செய்தேன். பேருந்தில் தரக்குறைவான திரைப்பட பாடல்களை ஒலிக்க செய்தார்கள். நிறைய இஸ்லாமிய பெண்களும் பயணம் செய்தார்கள். புனிதமான நோன்பு காலத்தில் இப்படி பாடல்களை ஒலிபரப்பு செய்தது கண்டு மிகவும் வருத்தம் அடைந்தேன். இப்படி பட்ட பேருந்துகளை மக்கள் தவிர்க்கலாம். முக்கியஸ்தர்கள் பேருந்து உரிமையாளரிடம் எடுத்து சொல்லலாம். நோன்பின் புனிதம் காக்கப்பட வேண்டும். அதற்கான சூழ்நிலையை சமூகம் உருவாக்கி தரவேண்டும்.

-பயணி