Adirai pirai
உள்ளூர் செய்திகள்

அதிரை மின்வாரியத்தை நடுங்க வைத்த இளைஞர்களின் நள்ளிரவு போராட்டம்… மின்சாரம் கிடைத்தது!

வீடியொ:

https://www.facebook.com/100010201621049/videos/632999520383430/

அதிரையில் நேற்று மாலை சுமார் 6:30 மணிக்கு துவங்கிய மின்வெட்டு அடிக்கடி மின் தொடர்பு கொடுக்கப்பட்டு மீண்டும் மின் நிறுத்தம் செய்யப்பட்டும் வருகின்றனர். 1:50 மணியாகியும் மின்சாரம் கிடைக்காததனால் பொதுமக்கள் ஒன்றிணைந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். ஒருமணி நேரத்துக்கும் மேலாக நீடித்த இந்த எழுச்சி மிகு போராட்டத்தால் ஈசிஆர் சாலையில் போக்குவரத்து ஸ்தம்பித்தது. இதையடுத்து போலீசார் வந்து மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதற்கு பின்னர் மின்சாரம் வழங்கப்பட்டது.

இதன மூலம் அதிரையர்களின் நள்ளிரவு போராட்டத்துக்கு வெற்றி கிடைத்துள்ளது.