Adirai pirai
POLITICS உள்ளூர் செய்திகள்

அதிரை திமுக சார்பில் தூத்துக்குடி துப்பாக்கி சூட்டை கண்டித்து ஆர்ப்பாட்டம்!

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி நேற்று நடைபெற்ற பேரணியில் வன்முறை மூண்டது.  போராட்டத்தின் போது போலீசார் பொதுமக்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில், இதுவரை 12 பேர் கொல்லப்பட்டனர். பலர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனை கண்டித்து அதிரையில் திமுக சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று மாலை பேருந்து நிலையத்தில் நடைபெற்றது. இதில் மாவட்ட, ஒன்றிய, கிளை நிர்வாகிகள், பொதுமக்கள் பலர் கலந்துகொண்டு அரச பயங்கரவாதத்துக்கு எதிராகவும், ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தியும், எடப்பாடி பழனிசாமியை பதவி விலக கோரியும் முழக்கங்களை எழுப்பினர்.