Adirai pirai
POLITICS உள்ளூர் செய்திகள்

தலைமை செயலகத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட ஸ்டாலின் கைது… சென்னையில் பதற்றம்!

தூத்துக்குடி கலவரம் துப்பாக்கி சூடு தொடர்பாக முதல்வரை சந்திக்க  தலைமைச் செயலகத்துக்குச் சென்ற ஸ்டாலின் உள்பட  திமுகவினர் முதல்வர் பழனிசாமியை சந்திக்க அனுமதி கோரினர்.

ஆனால், அவரை சந்திக்க அனுமதி மறுக்கப்பட்டதால் ஸ்டாலின் உள்பட திமுக எம்எல்ஏக்கள் 20 பேர் முதல்வர் அறை முன்பு அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டுள்ளனர். இதன் காரணமாக கோட்டையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

முதல்வர் அறை முன்பு அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டு வரும் ஸ்டாலின் உள்பட திமுக எம்எல்ஏக்களை அகற்ற போலீசார் முயற்சி மேற்கொண்டனர். ஸ்டாலினை குண்டுகட்டாக தூக்கி சென்று வெளியே விட்டனர்  இதன் காரணமாக பரபரப்பு நிலவி வருகிறது.

இதுகுறித்து  தகவல் அறிந்த திமுக தொண்டர்கள், கோட்டை நோக்கி விரைந்தனர்.  தலைமைச் செயலகம் எதிரே உள்ள  சாலையில் அமர்ந்து  மறியலில் ஈடுபட்டுள்ளனர். இதன் காரணமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.