Adirai pirai
education and jobs உள்ளூர் செய்திகள்

அதிரை காதிர் முஹைதீன் கல்லூரியில் B.A அரபி பட்டப்படிப்பு தொடக்கம்!

அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் கல்லூரியின் 64 ம் ஆண்டின் கல்விச்சேவையில் இந்த கல்வியாண்டு (2018-19) முதல் அரபிக் B.A. பட்டப்படிப்பு துவங்கப்பட்டுள்ளது. இஸ்லாமிய மார்க்கல்வியை அடிப்படையாகக்கொண்டு தீனிய்யாத் பயிற்சிகளுடன் வகுப்புகள் நடைபெறும். சரளமாக அரபு பேச, எழுத மற்றும் டைப்ரைட்டிங் போன்ற சிறப்பு பயிற்சிகளும் அளிக்கப்படும்.

எதிர் காலத்தில் சிறந்த தீனிய்யாத் மற்றும் அரபித்துறை ஆசிரியர்களாகவும், வெளிநாடுகளில் உயர் பணிகளிலும் சிறந்து விளங்க முடியும். மாணவிகள் நலன் கருதி வகுப்புகள் தனியாகவும், வாகன வசதியும், வெளியூர் மாணவிகளுக்கு ஹாஃஸ்டல் வசதியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

உங்கள் பிள்ளைகளின் இம்மை, மறுமை வாழ்வு சிறக்க அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் கல்லூரியில் அரபி BA பட்டப்படிப்பில் சேர்த்து பயன்பெறவும்.

மேலும் விபரங்களுக்கு :

877 890 6851

இங்ஙனம்

காதிர் முகைதீன் கல்லூரி

அதிராம்பட்டினம்.