Adirai pirai
உள்ளூர் செய்திகள்

அதிரை மக்களுக்கு வானத்திலிருந்து விழுந்த ரமலான் பரிசு!

கடந்த பல நாட்களாக அதிரையை வெயில் கடுமையாக வாட்டி வந்தது. இதனால் ரமலானில் நோன்பு வைத்துக்கொண்டு மக்கள் பெரிதும் கஷ்டப்பட்டனர்.

ரமலான் தொடக்கத்திலிருந்து வெயில் சூடான அனல் காற்றுடன் அடித்தது. இதனால் மக்கள் வெளியே செல்ல முடியாமல்  தவித்தனர். இந்நிலையில் தற்பொழுது முன்னர் திடீர் என குளிர்ச்சியான மழை காற்றுடன்  வானம் மேகங்கள் சூழ காணப்பட்டது. இதனை அடுத்து தற்பொழுது சாரல் மழை தொடர்ந்து பெய்து வருகிறது. இந்த மழை இன்னும் தொடர வேண்டும் என்பதே பெரும்பாலான அதிரை வாசிகளின் எதிர்பார்ப்பாகும்