Adirai pirai
islam Ramalan special உள்ளூர் செய்திகள்

அதிரை பள்ளிகளின் ரமலான் நிதி பற்றாக்குறைக்கு காரணம் என்ன?

அதிரையில் இந்த ஆண்டு கஞ்சிக்கு நிதின்றி பள்ளிவாசல்கள் கஷ்டப்படுவதற்கான காரணங்கள்! தீர்க்கும் யோசனைகள்…

அதிகபடியான பள்ளிகள் கட்டப்பட்டது ஒரு பக்கம் இருந்தாலும், இந்த ஆண்டு ஜமாஅத்துகள், இயக்கங்கள், நட்பு வட்டங்கள் நடத்தும் இஃப்தார் நிகழ்ச்சிகளுக்கு அதிகளவில் பொருளளுதவி செய்யப்பட்டதாலும், பைத்துல்மால் நடத்திய மாநாட்டுக்கு பெரும் பொருளுதவியை பலர் வழங்கிட்டதாலுமே இந்த ஆண்டு பள்ளிவாசல்கள் கஞ்சிக்கும், இஃப்தாருக்கும் நிதியின்றி தவிப்பதாக பள்ளிவாசல்கள் நிர்வாகிகள் உட்பட பலர் தெரிவிக்கின்றனர். நான் தனிப்பட்ட முறையில் சிலரிடம் பள்ளிகளுக்காக நிதியுதவி கேட்டபோது கூட அவர்கள் கூறிய பதில் இதை ஒட்டியதாகவே அமைந்தது. அது மட்டுமின்றி, திருமண சீசன், பள்ளிக்கூடங்கள் தொடங்கும் நேரம், பெருநாள் செலவுகள் போன்றவற்றுக்கு ஒரு பெரும் தொகை தேவைப்படுவதால் இந்த ஆண்டு பலர் பள்ளிகளுக்கு இஃப்தார் மற்றும் கஞ்சிக்கு நிதி வழங்கவில்லை என கூறுகின்றனர்.

எனவே அடுத்தடுத்த ஆண்டுகளில் முன்கூட்டியே பள்ளிவாசல்கள் நிதி வசூலை தொடங்கிவிடுவதுடன், இந்த ஆண்டு தமாம் வசூலுக்காக சேகரிக்கும் பணத்தை பிரியாணிக்கே செலவழித்து விடாமல், அதன் செலவுகளை குறைத்துக்கொண்டு, அல்லது அந்த தமாம் நிகழ்ச்சியை நடத்தாமல் அடுத்த ஆண்டுக்கான இஃப்தார், கஞ்சி நிதியாக பயன்படுத்தலாம்.