Adirai pirai
உள்ளூர் செய்திகள்

அதிரையில் தீ விபத்து… கட்டுப்படுத்தும் பணியில் தீயணைப்பு வீரர்கள் தீவிரம்!

அதிரை சுரைக்கா கொள்ளை அருகே மண்ணப்பன் குளம் அருகே குப்பை மேடு உள்ளது. இங்கு இன்று மாலை முதல் லேசாக தீ பற்றி எரிந்துகொண்டிருந்தது. இந்த நிலையில், இரவு காற்றின் வேகம் அதிகரித்ததால் தீ மளமளவென மற்ற பகுதிகளுக்கு பரிவியது. கொளுந்து விட்டெரிந்த தீயை கண்ட பொதுமக்கள் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.