Adirai pirai
articles islam உள்ளூர் செய்திகள்

மதவெறி போக்குடன் செயல்படுகிறதா அதிரை மின்சார வாரியம்?

ரமலான் என்றால் அமல்களும், குர்ஆனும், நோன்பு இருப்பதும், ஜகாத் கொடுப்பதும், தராவீஹும், சஹரும், இப்தாரும் தான் அனைவருக்கும் நினைவுக்கு வரும். ஆனால், அதிரையர்களுக்கு இவற்றை விட கூடுதலாக ஒன்று நினைவுக்கு வரும். ஆம், அது தான் மின்வெட்டு. பிற மாதங்களில் எல்லாம் தங்கு தடையின்றி விநியோகிக்கப்படும் மின்சாரம் ரமலானில் மட்டும் தடை செய்யப்படும்.

காரணம் அறிய தொடர்பு கொண்டால் எடுப்பது கிடையாது. ஒரு வேளை போனை எடுத்தால், காற்று அதிகமாக இருப்பதால் மரம் முறிந்துவிழுந்துவிட்டது, மின் கம்பம் விழுந்துவிட்டது, தொழில்நுட்ப கோளாறு என அண்ட புளுகு புளுகின்றனர் மின்சார வாரிய ஊழியர்கள். அதெப்படி ரமலானில் மட்டும் தான் காற்று வேகமாக வீசுகிறதா? மற்ற மாதங்களில் காற்று வீசாமல் இருக்கிறதா..? இந்த கேள்விகளுக்கு அவர்களிடம் பதில் இல்லை. இப்படி தொழில்நுட்ப கோளாறு ஏற்படும் நிலையில் மாதம் ஒருமுறை பராமரிப்புக்காக மின் தடை செய்யும் போது இவர்கள் என்ன வேலை செய்தார்கள்?

கடந்த ஆண்டுகளை போன்றே அதிரையில் இந்த ஆண்டும் ரமலான் பிறையுடன் மின் தடையும் சேர்ந்தே வந்துவிட்டது. இதனை கண்டித்து கடந்த 4 நாட்களுக்கு முன்பாக அதிரை இளைஞர்கள் நள்ளிரவில் மறியல் போராட்டமும் செய்துவிட்டனர். ஆனாலும், பிடிவாதமாக நோன்பாளிகளுக்கு நோவினை கொடுக்கும் வகையில் வகையில் மின் தடை செய்து வருகின்றௌ அதிரை மின்சார வாரியம். இவ்வளவுக்கும் மத்தியில் ரமலானுக்கு முன்பாக அதிரை மின்வாரியம் தொடங்கி திருச்சி மின்சாரத்துறை அதிகாரிவரை ரமலானில் மின் தடை செய்ய வேண்டாம் என அதிரையர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.

இருந்தும் இவர்கள் திருந்துவதாக இல்லை. நாள் தோறும் பல முறை பல மணி நேரங்கள் மின் தடை செய்யப்படுவதால், இந்த கோடை காலத்தில் நோன்பு வைத்துக்கொண்டு மக்கள் படும் பாடு ஏராளம். நாம் கஷ்டப்பட்டால் மின்வாரிய அதிகாரிகளுக்கு மகிழ்ச்சியோ என்னவோ தெரியவில்லை… தொடர்ந்து நம்மை கஷ்டப்படுத்தும் வகையில் மின்சாரத்தை துண்டித்து விளையாடி நமக்கு வேதனையை வரவழைத்து கொண்டிருக்கிறார்கள். நமது மக்கள் தானமாக கொடுத்த நிலத்தில் மின்வாரியத்தை நடத்துக்கொண்டு நமக்கு எதிராகவே செயல்படுகின்றனர் அதிகாரிகள்.

இதனை பெரும்பாலான மக்கள் மின்வாரியம், மதவெறி போக்குடன் செயல்படுவதாகவே கருதுகின்றனர். என்ன நடக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.