Adirai pirai
உள்ளூர் செய்திகள்

அதிரையில் பேரூந்துக்கு அடியில் சிக்கிய பைக்… ஒருவர் படுகாயம்!

அதிரை – பட்டுக்கோட்டை சாலையில் உள்ள டாஸ்மாக் கடை அருகே பாலத்தை விரிவுப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் அதிரையிலிருந்து பட்டுக்கோட்டை நோக்கி சென்று கொண்டிருந்த தனியார் பேருந்தும், அதிரை நோக்கி இரு சக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்த சரவணன் என்ற இளைஞரும் மோதிக்கொடதில், பைக் பேருந்து டயரில் சிக்கியது. இதில் படுகாயமடைந்த சரவணன், உடனடியாக மீட்கப்பட்டு பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.