Adirai pirai
உள்ளூர் செய்திகள்

அதிரையில் ஜல்லிக்கற்களை கொட்டி தார் சாலை என ஏமாற்ற முயற்சி… முட்டாள்கள் ஆக்கப்படும் மக்கள் (வீடியோ)

https://www.facebook.com/permalink.php?story_fbid=636849243331791&id=100010201621049

அதிரை செடியன் குளத்திலிருந்து மரைக்கா குளம் வரை பல்வேறு கோரிக்கைகளுக்கு பிறகு தார் சாலை அமைக்கும் பணி நடைபெற்றது. பல நாள் கோரிக்கைகளுக்கு பிறகு அமைக்கப்படும் சாலை தரமாக உள்ளதா என பார்வையிட சென்ற அப்பகுதி இளைஞர்களுக்கு காத்திருந்தது அதிர்ச்சி… ஆம், செம்மண்ணை அடித்து விட்டு, அல்வாவுக்கு முந்திரி பருப்பு தூவுவதை போல் ஜல்லி கற்களை கொட்டி மேலே லேசாக தாரை தெளித்து விட்டு சென்றுள்ளனர். இதனால் அந்த வழியாக தார் சாலைக்கு வழுக்கை விழுந்தது போல் கீழே இருக்கும் செம்மண் அதிகம் தெரிகிறது. கால்களை கொண்டு சாலையை தேய்த்து பார்த்த போது ஜல்லிக்கற்கள் தனியாக பெயர்ந்துகொண்டு வந்தன.

அதிரையில் மக்களின் பல கோரிக்கைகளுக்கு பிறகு பல லட்சங்கள் செலவில் செய்யப்படும் இது போன்ற அரசு நலத்திட்டங்களில் ஊழல் நடைபெறுவதாக மக்கள் சந்தேகிக்கின்றனர். சாலை அமைப்பு திட்டங்களாகட்டும், வடிகால் திட்டங்களாகட்டும் அந்த பணிகள் முடிவடைந்த ஒரு வருடத்தில் அது பழுதடைந்துவிடுகிறது.

இதற்கு என்ன வழி என்று தெரியவில்லை…? இது அதிகாரிகளின் மீதான குற்றமா? அல்லது அதனை செய்யும் ஒப்பந்ததாரர்களின் மோசடியா? என்று புரியவில்லை. மொத்தத்தில் மக்கள் முட்டாளாக்கப்பட்டு வருகின்றனர் என்பது மட்டும் மறுக்க முடியாத உண்மை…