Adirai pirai
islam உள்ளூர் செய்திகள்

சமூக வலைதளங்களில் பாராட்டை பெற்று வரும் அதிரையின் இந்து முஸ்லீம் ஒற்றுமை!

அதிரை கரையூர் தெருவில் ஆண்டு தோறும் மாரியம்மன் கோவில் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதிரையில் இஸ்லாமியர்கள் அதிகளவில் வசித்தாலும் இங்குள்ள இந்து கிறுஸ்தவ மத சகோதரர்களுடன் எப்போதும் ஒற்றுமையாக பழகி வருகின்றனர். இந்த நிலையில் நேற்று முந்தினம், மாரியம்மன் கோவில் திருவிழாவை ஒட்டி பேருந்து நிலையம் அருகே மாலை 6:30

மணியளவில் காவடி நடைபெற்றது. அப்போது நோன்பு திறப்பதற்காக மஃரிப் நேரத்தில் பாங்கு சொல்லப்பட்டது. இதனை கேட்ட இந்து மத சகோதரர்கள் தாரை தப்பட்டைகளை நிறுத்தி இஸ்லாமியர்களுக்கு ஒத்துழைப்பு வழங்கினார்கள்ழ்

இஸ்லாமியர்கள் இது குறித்து எந்த வேண்டுகோளும் விடுக்காத நிலையில் தாங்களாக முன் வந்து ஒத்துழைப்பு நல்கிய இந்து மத சகோதரர்களின் செயல் சமூக வலைதளங்களில் வைரலாகி பலரது பாராட்டுக்களை பெற்று வருகிறது. சாதி மதத்தின் பெயரை நாட்டு மக்களை துண்டாடி அரசியல் ஆதாயம் தேட நினைக்கும் பாஜக, ஆர்.எஸ்.எஸ். பாசிச கும்பல்களுக்கு அதிரையர்களின் இந்த ஒற்றுமை பேரிடியாக அமைந்துள்ளது.