Adirai pirai
islam Uncategorised Uncategorized

உலக மக்களை கண்ணீர் கடலில் மூழ்கடித்துள்ள இளைஞர் அலி பெனாட்டின் மரணம்… யார் இவர்?

ஆஸ்திராலியாவில் செல்வ செழிப்புடன் பிறந்த அலிபெனாட் என்ற இளைஞர் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான கார்கள், ஆடைகள், அணிகலன்களுடன் செல்வ செழிப்புடன் வாழ்ந்து வந்தார். இந்த நிலையில் இவருக்கு 4 ஆம் நிலை கேன்சர் இருப்பது கண்டறியப்பட்டது. இதனை தெரிந்துகொண்ட அலி பெனாட் தனது செல்வ செழிப்பான வாழ்க்கை முறையை மாற்றி தனது சொத்துக்களை MATW Project என்ற அமைப்பின் மூலம் மக்களுக்கு அள்ளி வழங்கி மக்களுடன் மக்களாக வாழ்ந்து வந்தார். குறிப்பாக அப்பிரிக்காவில் பஞ்சத்தால் கஷ்டப்படும் குழந்தைகளுக்கு இவர் செய்த உதவிகள் ஏராளம்.

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக இவருக்கு கேன்சர் நோய் முற்றிய நிலையில் அவர் அல்லாஹ்விடம் சென்றடைந்தார். இவருடைய மரண செய்தி உலக மக்களை கண்ணீர் கடலில் மூழ்கடித்துள்ளது.