Adirai pirai
உள்ளூர் செய்திகள்

அதிரையில் அரசு பேருந்தின் தகரம் காற்றில் பறந்து பொதுமக்கள் அருகில் விழுந்ததால் பரபரப்பு!

இன்று மாலை A 38 என்ற அரசு பேருந்து அதிரை பேருந்து நிலையத்தில் ஏராளமான பயணிகளை ஏற்றிகொண்டு பட்டுக்கோட்டை நோக்கி சென்று கொண்டிருந்தது. வண்டிப்பேட்டை அருகே பேருந்து சென்று கொண்டிருந்தபோது பலத்த காற்று வீசியதில் பேருந்தின் மேலே உள்ளா தகரம் கீழே விழுந்தது. இது அங்கிருந்த பொதுமக்களின் மீது விழாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. பேருந்தின் தரம் இவ்வளவு மோசமாக இருப்பதை கண்டு பொதுமக்கள் பயணிகள் பேருந்து ஓட்டுனர் மற்றும் நடத்துனரிம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.