முத்துப்பேட்டையில் மதக்கலவரத்தை தூண்ட முயற்சி… கருப்பு முருகானந்தம் மீது வழக்குப்பதிவு!

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் பா.ஜனதா கட்சி சார்பில் உழவனின் உரிமை மீட்பு சைக்கிள் பேரணி பொதுக்கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் பா.ஜனதா மாநில பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தம் கலந்து கொண்டு பேசினார். அவர் போது, மத கலவரத்தை தூண்டும் வகையிலும், மேலும் மாவட்ட நிர்வாகத்தை குறித்தும் அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது.

இதுபற்றி சப்-இன்ஸ்பெக்டர் கணபதி, முத்துப்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் ராஜேஷ், பா.ஜனதா பிரமுகர் கருப்பு முருகானந்தம் மீது மத கலவரத்தை தூண்டும் வகையில் பேசியதாக 504 பிரிவின் கீழ் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Courtesy: மாலை மலர்

இதற்கு முன் கருப்பு மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், அவரை இந்த வழக்கிலாவது போலீசார் கைது செய்வார்களா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Close