Adirai pirai
Ramalan special உள்ளூர் செய்திகள்

அமீரகத்தில் சிறப்பாக நடைபெற்ற அதிரை TIYA கிளையின் இஃப்தார் நிகழ்ச்சி!

அதிரை மேலத்தெரு அமீரக TIYA நிர்வாகத்தின் சார்பில் ஆண்டு தோறும் துபாயில் இஃப்தார் நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் 6 வது ஆண்டு இஃப்தார் நிகழ்ச்சி இன்று 01.06.2018 வெள்ளிக்கிழமை மாலை 6.00 மணிக்கு ஹர்மியா பார்க்கில் நடைபெற்றது. இதில் பெண்களுக்கு தனி இட வசதி ஏற்பாடு செய்யப்பட்டு இருந்ததால் பலர் குடும்பத்தினருடன் இஃப்தார் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.