Adirai pirai
islam உள்ளூர் செய்திகள்

மார்க்க கல்வி, உலக கல்வி இரண்டிலும் சாதித்து வரும் அதிரை இரட்டை சகோதரர்கள்!

அதிரை CMP லேன் பகுதியை சேர்ந்தவர் சலீம். இவரது இரட்டை மகன்கள் ஸஹல், சுஹைல். மார்க்க கல்வி, உலக கல்வி இரண்டிலும் இவர்கள் சிறந்து விளங்குகிறார்கள். இவர்கள் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பாக படித்த பள்ளி அளவில் 10 ஆம் வகுப்பில் அதிக மதிப்பெண்களை பெற்று அசத்தினர். அப்போது குர் ஆனையும் மனனம் செய்து கொண்டிருந்த இவர்கள் இருவரும்கடம்த 2017 ஆம் ஆண்டு அதிரை ஸலாஹிய்யா மதர்ஷாவில் ஹிஃப்ழு முடித்தனர்.

இதையடுத்த 11 ஆம் வகுப்பை பாபநாசத்தில் உள்ள இக்லாஸ் அரபிக்கல்லூரியில் படித்த இவர்கள்அதிலும் முதல் இரண்டு இடங்களை பிடித்து அசத்தியுள்ளனர். உலக்கல்விக்காக மார்க்கக்கல்வியை கைவிடும் இந்த காலத்தில் இரண்டிலும் சாதித்து வரும் இந்த சகோதரர்களுக்கும் அவர்களின் பெற்றோருக்கும் அதிரைபிறையின் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம்.