Adirai pirai
Uncategorised uncategorized Uncategorized Uncategorized

சவுதி அரேபியா அமைச்சரவை மீண்டும் மாற்றியமைப்பு

சவுதி அரேபியாவில் அமைச்சரவை இரண்டாவது முறையாக மீண்டும் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. சவுதி அரேபியாவின் இளவரசராக முகமது பின் சல்மான் பொறுப்பேற்ற பிறகு பல துறைகளில் மாற்றம் செய்து வருகிறார். அதனை கட்டுப்படுத்தி நிர்வகிக்க கலாசாரத் துறை அமைப்பு புதிதாக உருவாக்கப்பட்டுள்ளது. இந்த அமைச்சரவை மாற்றத்தின்போது தனியாக பிரிக்கப்பட்ட கலாசாரத் துறை அமைச்சராக இளவரசர் பதெர் பின் அப்துல்லா நியமிக்கப்பட்டுள்ளார். தொழிலாளர் நலத்துறை மற்றும் சமூக மேம்பாட்டுத்துறை அமைச்சராக இருந்த அலி பின் நாசர் அல்-காபிஸ் நீக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக அந்த பதவியில் அஹமத் பின் சுலைமான் அல்-ராஹ்ஜி என்பவரை நியமித்து மன்னர் சல்மான் உத்தரவிட்டுள்ளதாக சவுதி மன்னர் மாளிகை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.