Adirai pirai
Uncategorised Uncategorized

கத்தாருக்கு சவுதி அரேபியா கடும் எச்சரிக்கை

மத்திய கிழக்கு நாடான கத்தார், பல்வேறு பயங்கரவாத அமைப்புகளுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருப்பதாகவும், தன் பரம எதிரி நாடான ஈரானுடன் நட்பு பாராட்டுவதாகவும், வளைகுடா நாடான, சவுதி அரேபியா குற்றம்சாட்டியது; இதை கத்தார் அரசு மறுத்தது. ஆனாலும், கத்தார் மீது, சவுதி, பொருளாதார தடை விதித்தது. இதையடுத்து, ரஷ்யாவுடன், கத்தார் நட்புறவு பாராட்ட துவங்கியது.இந்நிலையில், எஸ் – 400 என்ற அதிநவீன போர் ஏவுகணையை ரஷ்யா உருவாக்கியது. இந்த ஏவுகணையை ரஷ்யாவிடம் இருந்து வாங்க, கத்தார் ஒப்பந்தம் போட்டது. இதற்கு, சவுதி அரேபியா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரோனுக்கு, சவுதி சார்பில் கடிதம் எழுதப்பட்டது.’கத்தார், தன் முடிவை மாற்றிக் கொள்ளாவிட்டால், அந்த நாட்டின் மீது, ராணுவ நடவடிக்கை எடுக்க தயங்க மாட்டோம்’ என, சவுதி அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.