அதிரை இமாம் ஷாபி பள்ளியின் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி!

அதிரை இமாம் ஷாபி பள்ளி கடந்த பல ஆண்டுகளாக ஊர் மக்களின் நன்மதிப்பை பெற்று இயங்கி வருகிறது. இந்த நிலையில் இத்தனை ஆண்டுகளாக இந்த பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்களை ஒன்றிணைக்கும் வகையில் முன்னாள் மாணவர்கள் கூட்டத்தை ஏற்பாடு செய்துள்ளனர். இதில் பள்ளி கட்டப்பட்டுள்ள இப்னு அல் ஹைதன் அரங்கம் திறந்து வைக்கப்பட்ட உள்ளது. அதை தொடர்ந்து பள்ளியின் சாதனைகள் குறித்தும் விளக்கப்பட உள்ளது.

வரும் ஜூன் 18 ஆம் தேதி மாலை 4 மணிக்கு பள்ளி வளாகத்தில் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் முன்னாள் மாணவர்கள் அனைவரும் பங்கேற்குமாறு கேட்டுகொள்ளப்படுகிறது.

Close