Adirai pirai
உள்ளூர் செய்திகள்

அதிரை அரசு மருத்துவமனை கண்ணாடிகள் அடித்து உடைப்பு, நள்ளிரவில் பதற்றம்

அதிரையில் நள்ளிரவு பைக்கில் சென்ற சில இளைஞர்களுக்கு கீழே விழுந்து காயம் ஏற்பட்டுள்ளது. உடனடியாக அவர்கள் அரசு மருத்துவமனைக்கு சென்றுள்ளனர். உள்ளே இருந்த 2 பெண் செவிலியர்கள் கதவை திறக்க தாமதாக்கி உள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த இளைஞர்கள் தாமதமாக கதவை திறந்த செவிலியர்களை தாக்க முற்பட்டதாக கூறப்படுகிறது. பின்னர், ஆத்திரத்தில் மருத்துவமனையின் கண்ணாடிகளை அடித்து உடைத்துள்ளனர். நள்ளிரவு என்பதால் தாக்குதலில் ஈடுபட்ட இளைஞர்கள் யார் என்ற தகவல் கிடைக்கவில்லை. இதனால் அதிரையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.