இஸ்லாமிய கிராமத்தில் 10ஆம் வகுப்பு முடித்த ஒரே பெண்!

ரியானா மாநிலம் பஞ்சகுலா மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் கடந்த இரு ஆண்டுகளில் ஒரே ஒரு பெண் மட்டும் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றுள்ளார்.

அரியானா மாநிலத்தில் பஞ்சகுலா மாவட்டத்தில் உள்ள ஒரு சிற்றூர் ரெகானா.   இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் இந்த சிற்றூரில் உள்ள நடுநிலைப் பள்ளி கடந்த 2014-15 ஆம் வருடம் உயர்நிலைப் பள்ளியாக மாற்றப்ப்ட்டது.  அதன் பிறகு 2016ஆம் வருடம் மார்ச் மாதம் நடந்த 10ஆம் வகுப்பு தேர்வில் 35 மாணவர்கள் தேர்வு எழுதி ஐந்து பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர்.

அதற்கு அடுத்த 2016 ஆம் வருடம் 10 ஆம் வகுப்பு தேர்வு எழுதிய 41 மாணவர்களும் தோல்வி அடைந்தனர்.   இந்த வருடம் தேர்வு எழுதிய 63 மாணவர்களில் இவர்களும் அடங்குவார்கள்.  இந்த வருடமும் இவர்கள் தோல்வி அடைந்துள்ளனர்.  இந்த வருடம் இந்தப் பள்ளியில் முதல் முறையாக முஸ்ரா காத்துன் என்னும் மாணவி தேர்ச்சி அடைந்துள்ளார்.

இந்தப் பள்ளியில் ரசாயன ஆசிரியர் பௌதிகம் மற்றும் தாவரவியல் பாடங்களை நடத்தி வருகிறார்.  அத்துடன் ஆங்கில ஆசிரியரே கணக்கு பாடத்தை நடத்துகிறார்.   அப்படி இருந்தும் முஸ்ரா தனது 10 ஆம் வகுப்பு தேர்வில் 69% மதிப்பெண் எடுத்துள்ளதை அந்தப் பள்ளி ஆசிரியர்கள் மிகவும் பாராட்டி உள்ளனர்.

முஸ்ரா மிகவும் ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவர்.   அவர் தந்தை இக்பால் விவசாயம் பார்க்கிறார்.   ஒரு அறை மட்டுமே உள்ள ஒரு சிறிய வீட்டில் டிவி, ஃபிரிட்ஜ்,  வாகனம், ஸ்மார்ட் ஃபோன் போன்ற எந்த வசதியும் இல்லாத வீட்டில் இவர்கள் வசித்து வருகின்றனர்.  தனக்கு கிடைக்காத கல்வி தனது மகளுக்கு கிடைக்க வேண்டும் என்பதில் இக்பால் தீவிரமாக உள்ளார்.  முஸ்ரா தனது தந்தைக்கு உதவ படித்துக் கொண்டே தையல் வேலை செய்து வருகிறார்.

மருத்துவர் ஆக விரும்பும் முஸ்ரா தனது பள்ளியில் உள்ள வசதிகளைக் கொண்டு மருத்துவக் கல்லூரி சேரும் அளவுக்கு கல்வி கற்க முடியாது என்பதை உணர்ந்துள்ளார்.   அவர் தனது கிராமத்தில் உள்ளது போல பல பள்ளிகள் மாநிலத்தில் உள்ளதாகவும் அவை அனைத்தையும் மேம்படுத்தினால் தன்னைப் போன்ற மாணவிகளின் கனவு நிறைவேறும் என தெரிவித்துள்ளார்.

Close