Adirai pirai
Ramalan special உள்ளூர் செய்திகள்

அதிரையில் கனமழை!

அதிரையில் சில மாதங்களாக மழை என்றால் என்ன என்று தெரியாமல் இருந்துவந்தது. அதேசமயம் ரமலான் மாதமும் வந்துவிட்டது. அருகில் உள்ள பல ஊற்களில் நல்ல மழை பெய்து அதிரையினரை வருத்தப்பட வைத்தது. மேலும் ரமலான் மாதத்தின் 20 நோன்புகள் முடிந்தும் இன்று கூட வெயில் வாட்டிவதைத்தது. இதனால் அதிரை மக்கள் அனைவருமே வருத்தத்துடன் மழைக்காக 20 நாட்கள் காத்துக்கிடந்தனர்.

அதேபோல இன்று மஃரிப் பாங்கிற்கு பிறகு (இஃப்தார்) நேரத்தில் அதிரையினரை ஆச்சரியத்தில் ஆழ்த்திய இந்த மழையால் அதிரை முழுவதும் குளிர்ச்சியான சூழல் நிழவிவருகிறது. மேலும் அதிரையினருக்கு இந்த மழையால் மகிழ்ச்சிக்கு பஞ்சமே இருக்காது என்பது குறிப்பிடத்தக்கது.