Adirai pirai
INFORMATION இந்தியா

திருமணப் பதிவு செய்யாவிட்டால் பாஸ்போர்ட் முடக்கப்படும்

வெளிநாடு வாழ் இந்தியர்கள் 48 மணி நேரத்துக்குள் திருமணத்தை பதிவு செய்யாவிட்டால் பாஸ்போர்ட்டுகள் முடக்கப்படும் என மேனகா காந்தி எச்சரித்துள்ளார்.

முன்பு வெளிநாடு வாழ் இந்தியர்கள் இந்தியாவில் திருமணம் செய்துக் கொண்டால் அந்த திருமணத்தை பதிவு செய்ய காலக் கெடு எதுவும் இல்லாமல் இருந்தது.   ஆனால் இவ்வாறு திருமணத்தைப் பதிவு செய்யாமல் வெளி நாடு செல்லும் பெண்களை கணவர்கள் கைவிட்டு விடுவதாக புகார் எழுந்ததால் இந்த விதியில் மாறுதல் செய்யப்பட்டது.

அதாவது திருமணம் முடிந்து 30 நாட்களுக்குள் திருமணத்தை பதிவு செய்ய வேண்டும் எனவும் தவறினால் பதிவு செய்யும் வரை ஒரு நாளைக்கு ரூ.5 ரூபாய் வீதம் அபராதம் விதிக்க்கப்படும் என அறிவிக்கப்பட்டது.   ஆயினும் வெளிநாடுகளில் கணவர்களால் கை விடப்படும் பெண்களின் எண்ணிக்கை குறையாமல் இருந்தது.

அதை ஒட்டி மத்திய அமைச்சர் மேனகா காந்தி, “இந்தியாவில் திருமணம் செய்துக் கொள்ளும் வெளிநாடு வாழ் இந்தியர்கள் 48 மணி நேரத்துக்குள் திருமணத்தை பதிவு செய்ய வேண்டும்.   அப்படி செய்யாவிட்டால் அவர்களின் பாஸ்போர்ட் முடக்கப்படும்.   அல்லது அவர்கள் வெளிநாடு செல்ல தடை செய்யும் வகையில் லுக் அவுட் நோட்டிஸ் அனுப்பப்படும்” என எச்சரிக்கை விடுத்துள்ளார்.