பட்டுக்கோட்டையில் இருந்து பதற வைக்கும் பயணம்… தரிக்கெட்டு தஞ்சை செல்லும் பேருந்துகள்

மரணத்தை கண்முன் நிறுத்திய பட்டுகோட்டை To தஞ்சாவூர் செல்லும் தனியார் பேருந்துகள்! ஒருவரை ஒருவர் ஓடிப்பிடித்து விளையாடுவதுபோல்… பேருந்துகளை வைத்துக்கொண்டு முன்னுக்குப் பின் முரணாக முந்திச்செல்கிறார்கள்!

அதிரவைக்கும் கொச்சை குத்துப்பாட்டுக்களை அதிக சத்தத்துடன் ஒலித்துக்கொண்டு செல்கிறது பேருந்துகள். பேருந்து நிறுத்தத்தில் ஏற வேண்டுமனால் குரங்கிடம் பயிற்சி பெற்று வரவேண்டிய நிலையில் உள்ளது. பத்து ரூபாய் பயணச்சீட்டுக்களுக்காக முந்தி செல்ல நினைக்கும் இவர்கள் அமைதியாக நிறுத்தி மக்களை ஏற்றி இறக்கினால் வசூல் வராமல் போய்விடுமா? இல்லை குறிப்பிட்ட நேரத்திற்கு செல்லாமல் போய்விடுவார்களா?

இங்கு எதற்கும் பொறுமை இல்லை எல்லாத்திற்கும் நாய்களுக்கு எழும்புத்துண்டை வீசினால் கவ்வி விடுவார்கள் என்ற அவலநிலை, உலகத்திலேயே போக்குவரத்தில் பாதுக்காப்பற்ற புண்ணிய பூமி இந்த இந்தியா!

பேருந்தில் பயணம் செய்யும் நாம் இனி மரணத்தை பதிவு செய்துவிட்டுத்தான் பேருந்தில் ஏறவேண்டும். போக்குவரத்து அதிகாரிகளோ, மாவட்ட ஆட்சியாளர்களோ இதை இந்த நிமிடம் வரை கண்டுக்கொள்வதில்லை என்று பற்றி எரிகிறதோ அன்று அணைக்க வருவார்கள்!

Close