Adirai pirai
உள்ளூர் செய்திகள்

அதிரையை 2வது நாளாக குளிர்வித்து சென்ற அழகிய மழை… மக்கள் மகிழ்ச்சி

அதிரையில் சில மாதங்களாக மழை என்றால் என்ன என்று தெரியாமல் இருந்துவந்தது. அதேசமயம் ரமலான் மாதமும் வந்துவிட்டது. அருகில் உள்ள பல ஊற்களில் நல்ல மழை பெய்தாலும் அதிரையில் மழை எட்டிப்பார்க்காமல் அதிரையினரை வருத்தப்பட வைத்தது. மேலும் ரமலான் மாதத்தின் 20 நோன்புகள் முடிந்தும் வெயில் வாட்டிவதைத்தது. இதனால் அதிரை மக்கள் அனைவருமே மழைக்காக காத்துக்கிடந்தனர்.

இந்த நிலையில் நேற்று மஃரிப் பாங்கிற்கு பிறகு (இஃப்தார்) நேரத்தில் அதிரையில் மழை பெய்து மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. இதே போல் இன்று மாலையிலும் அதிரை மழை கொட்டித்தீர்த்தது. இந்த மழையால் அதிரை முழுவதும் குளிர்ச்சியான சூழல் நிலவிவருகிறது.

படங்கள்: மன்சூர்