Adirai pirai
articles உள்ளூர் செய்திகள்

அதிரை அரசு மருத்துவமனையில் தகராறு செய்தது யார்? நடந்தது என்ன? உண்மை இதோ…

2 நாட்களுக்கு முன்பாக நள்ளிரவு அதிரை அரசு மருத்துவமனைக்குள் சில இளைஞர்கள் புகுந்து மருத்துவமனை கண்ணாடிகளை உடைத்து அராஜகம் செய்ததாகவும், செவிலியர்களிடம் தவறாக நடைபெற்றதாகவும் செய்தி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக சிசிடிவி வீடியோவும் வெளியானது.

அந்த வீடியோவில் இடம் பெற்ற இளைஞர்களிடம் அதிரை பிறை சார்பாக பேசினோம். அப்போது தான் பல்வேறு உண்மைகள் நமக்கு தெரியவந்தது. அதாவது நள்ளிரவு பைக்கில் சென்ற இளைஞர் ஒருவருக்கு விபத்து ஏற்பட்டு அரசு மருத்துவமனைக்கு வந்துள்ளதாக சில இளைஞர்களுக்கு தகவல் கிடைத்துள்ளது. அவர்கள் விபத்துக்குள்ளான இளைஞருக்கு உதவும் நோக்கில் அரசு மருத்துவமனைக்கு சென்றுள்ளனர். ஆனால், சம்பந்தப்பட்ட இளைஞர் போதையில் இருந்ததால் செவிலியர்களிடம் தகராறு செய்ய முயன்றுள்ளார். இதனை பார்த்த மற்ற இளைஞர்கள், போதையில் இருந்த இளைஞரை தடுக்க முயன்றுள்ளனர். ஆனால், அவர் மருத்துவமனையின் கதவில் உள்ள கண்ணாடிகளை உடைத்துள்ளார்.

இதன் மூலம், அந்த தகராறு என்பது சம்பந்தப்பட்ட அந்த ஒரு இளைஞரால் மட்டுமே நடந்துள்ளதே தவிர, அங்கிருந்த மற்ற இளைஞர்களால் ஏற்படவில்லை என்பது உறுதியாகிறது. ஆனால் சமூக வலைதளங்களில் ஒட்டுமொத்த இளைஞர்களும் தவறு செய்துவிட்டதாக தகவல் மற்றும் சிசிடிவி வீடியோ வெளியானதால் உதவுவதற்காக மருத்துவமனைக்குசென்ற மற்ற இளைஞர்களையும் பொதுமக்கள் தவறாக புரிந்துகொண்டுள்ளனர். இதனால் அவர்களது குடும்பத்திலும் பிரச்சனை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. தவறு செய்த அந்த ஒரு இளைஞர் மட்டுமே இங்கு தண்டனைக்கு உரியவர். எனவே மற்ற அப்பாவி இளைஞர்களின் படங்களை சமூக வலைதளங்களில் வெளியானால் அவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படும் சூழல் உள்ளது. இதனை கருத்தில் கொண்டு அந்த அனைவரும் இது தொடர்பான சரியான செய்தியை பரப்புமாறு கேட்டுகொள்கிறோம்.

அதிரை பிறையில் வெளியான வீடியோவிலும் பிரச்சனையை தடுக்க சென்ற இளைஞர்களின் முகங்கள் தெரிந்ததால் அவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு நாம் அதனை நீக்கியுள்ளோம்.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy