7 பள்ளிவாசல்களை மூடி இமாம்களை வெளியேற்றிய ஆஸ்திரியா அரசு!

கடந்த ஏப்ரல் மாதத்தில் ஆஸ்திரியாவில் துருக்கி ஆதரவு பெற்ற மசூதிகளில் சிறுவர்களுக்கு வீரர்கள் போல் ஆடை அணிந்து காலிபோலியின் முதல் உலக்போர் குறித்த நிகழ்ச்சி நடத்தப்பட்டுள்ளது.

இதில் சிறுவர்கள் துருக்கி நாட்டின் தேசிய கொடியை ஏந்தி வந்த புகைப்படங்கள் வெளியானது. இது குறித்து விசாரணை நடத்த மத விவகாரத் துறைக்கு வேந்தர் செபாஸ்டின் குரூஸ் உத்தரவிட்டார். இதை தொடர்ந்து வெளிநாட்டு நிதி பெறும் இமாம்களை வெளியேற்றி 7 மசூதிகளை மூட ஆஸ்திரியா அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை அந்நாட்டு வேந்தர் செபாஸ்டின் குரூஸ் வெளியிட்டுள்ளார்.

இந்த மசூதிகள் துருக்கி&இஸ்லாமிய கலாச்சார சங்கங்களின் அமைப்பு சார்பில் நடத்தப்படுகிறது. இந்த அமைப்பு ஜெர்மனியை தலைமையிடமாக கொண்டதாகும். இந்த புகைப்படங்கள் வெளியான போது இந்த அமைப்பும் கண்டனம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Close