Adirai pirai
இந்தியா

மனைவியின் எடிஎம் ரகசிய எண்ணை கணவரிடம் பகிர தடை!

பெங்களூருவை சேர்ந்த தம்பதியினர் மூன்று வருடங்களுக்கு முன்பு நீதிமன்றத்தில் பதிவிட்ட வழக்கிற்கு இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதன்படி, மனைவி தனது கணவரிடம் ஏடிஎம்-ல் பணம் எடுத்துவரக் கூறி ரகசிய எண்ணை கொடுத்துள்ளார். பணம் எடுக்க சென்ற கணவனுக்கு ஏடிஎம்-ல் பணம் வரவில்லை, ஆனால் காசு எடுக்கப்பட்டதாக ரசீது வந்துள்ளது.

இதனையடுத்து , வங்கியை தொடர்பு கொண்ட போது, ஏடிஎம் ரகசிய எண்ணை கணவனுக்கு பகிர்ந்ததால் ,  பணம் திரும்பி தர இயலாது என தெரிவிக்கப்பட்டது. அதனால் தம்பதியினர் வழக்கு பதிவு செய்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் வங்கி முறைப்படி ரகசிய எண்ணை பகிரக்கூடாது எனக் கூறி வழக்கை தள்ளுபடி செய்தது. 

மேலும் வங்கி விதிகளின் படி, ஏடிஎம் கார்டு என்பது கணக்கு வைத்திருப்பவருக்கு வங்கி கொடுக்கு கார்டு பாஸ் புக். இதனை சம்பந்தப்பட்டவர் மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்பது, கடவு எண்ணை யாருக்கும் தெரிவிக்க கூடாது மற்றும் மாற்றத்தக்கதல்ல என்றும் அறிவுறுத்தியுள்ளனர்