அதிரையில் மின்சாரம் தாக்கிய விபத்தில் எலெக்ட்ரிசியன் பரிதாபமாக பலி!

அதிரை புதுமனைத்தெருவில் உள்ள ஒரு வீட்டில் தண்ணீர் மோட்டாரில் பழுது ஏற்பட்டதால், வீட்டின் உரிமையாளர் அதனை எலெட்ரிசியன்களை அழைத்து சீர் செய்து கொண்டிருந்தார். இன்று காலை தொடங்கிய மாலை வரை நடைபெற்றுள்ளது. இதில் வீரபாண்டியன், நாகராஜ், சேகர், ராமலிங்கம் ஆகிய 4 பேர் சீர் செய்யும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

அப்போது திடீரென, மாலை 5 மணியளவில் மின்சாரம் தாக்கியதில் காசாங்காட்டை சேர்ந்த வீரபாண்டியன் (வயது 42) என்ற எலெட்ரிசியன் பரிதாபமாக உயிரிழந்தார். அவரது உடல் அதிரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. நாகராஜ், சேகர், ராமலிங்கம் ஆகிய 3 பேரும் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இது குறித்து போலீஸாஎ வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Close