Adirai pirai
உள்ளூர் செய்திகள்

அதிரை சாயக்காரத்தெருவில் குவியும் குப்பைகள்… மூக்கை மூடிக்கொண்டு செல்லும் மக்கள்!

அதிரை சாயக்காரத் தெருவில், மாஜிதா ஜூவல்லரி அருகில் உள்ள பிரதான சாலை அருகில் தினமும் குப்பைகள், பிளாஸ்டிக் பைகள், வீட்டு சமையல் கழிவுகள் கொட்டப்பட்டு வருகிறது. இதனால் இவ்வழியாக செல்லும் பாதசாரிகள் நடந்து செல்லும் போது துர்நாற்றம் வீசுகிறது. கால் நடைகளும் பிளாஸ்ட்டிக் பைகளை சாப்பிடுவதால் அவற்றுக்கு உடல் நலன் பாதிப்படைகிறது. அதிரை பேரூராட்சி இவ்விடத்தில் சேரும் குப்பைகளை தினமும் அகற்றி குப்பைத் தொட்டி அமைத்து, அப்பகுதி பொது மக்களை நோய் தொற்றிலிருந்து காக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

படங்கள்: மன்சூர்