Adirai pirai
EID SPECIAL posts உள்ளூர் செய்திகள்

அதிரை சம்சுல் இஸ்லாம் சங்கத்தில் நடைபெற்ற இஃப்தார் நிகழ்ச்சி!

அதிரை சம்சுல் இஸ்லாம் சங்கம் நடத்தும் இரண்டாம் ஆண்டு இஃப்தார் நிகழ்ச்சி இன்று புதுமனைத்தெரு சங்க வளாகத்தில் நடைபெற்றது. சங்க தலைவர் MSM.அபூபக்கர் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், இணை செயலாளர் அப்துல் ரஹீம் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார்கள். ஆண்டறிக்கையை இளைஞரணி செயலாளர் முஹம்மது சலீம் வாசித்தார். சங்க செயலாளர் அப்துல் காதர் இஃப்தார் நிகழ்ச்சி குறித்து பேசினார். துணைத்தலைவர் மன்சூர் நன்றியுரையாற்றினார். இறுதியாக யூசுப் மௌலானா அவர்களின் துஆவுடன் நிகழ்ச்சி இனிதே நிறைவடைந்தது.

இதில் அதிரை VAO அசாருத்தீன், சுற்றுசூழல் மன்ற தலைவர் விவேகானந்தம் மற்றும் சிறப்பு அழைப்பாளர்கள், முஹல்லாவாசிகள், இளைஞர்கள் உள்ளிட்ட 800க்கும் அதிகமானோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை SISYA நிர்வாகிகள் சிறப்பாக செய்திருந்தனர்.