அதிரை பள்ளிகளில் நடக்கும் தமாம் நிகழ்ச்சி செய்திகளை புறக்கணிக்கிறது அதிரை பிறை!

தற்போது ரமலானின் இறுதி மூன்று அல்லது 4 நாட்களில் நாம் உள்ளோம். நேற்று, இன்று நாளை, வரை அதிரை பள்ளிகளில் தமாம் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதற்காக எவ்வளவு பொருளாதாரம் வீணாகிறது என்பதை விளக்கி ஒரு செய்தியை நேற்று வெளியிட்டிருந்தோம்.

அதிரையில் 3 நாட்களில் 10 லட்சம் ரூபாய் பணம் வீணாக்கப்படும் அவலம்!

இது போன்ற பல்வேறு தேவையற்ற பொருட் செலவை ஏற்படுத்தும் இந்த நிகழ்வை செய்தியாக வெளியிட்டு நாம் ஊக்கப்படுத்த விரும்பவில்லை. எனவே பள்ளிகளில் நடக்கும் தமாம் நிகழ்ச்சி பற்றிய செய்திகளை அதிரை பிறையில் வெளியிடாமல் புறக்கணிக்கிறோம். இது போல் தேர்வு முடிவுகள் தொடர்பான செய்திகளையும் நாம் புறக்கணித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Close