ரஷீத் அலி மரணம்!

மல்லிப்பட்டினத்தை சேர்ந்த ரஷீத் அலி என்பவர் கடந்த சில ஆண்டுகளாகவே சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டு அதற்கான சிகிச்சை பெற்று வந்தார். அவரின் குடும்ப சூழலால் தொடர்ந்து சிகிச்சை பெற இயலவில்லை.

இந்நிலையில் கால்களில் சலம், இரத்தம் வெளியாக துவங்கியது. உடல் மிகவும் இயலாமல் போனதன் காரணமாக மதுரை தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்தார்.

கால் துண்டிக்க படலாம் என மருத்துவர்கள் கூறிவந்த நிலையில் அவரின் மருத்துவ தேவைக்காக 3 லட்சம் ரூபாய் தேவை பட்டது. இது தொடர்பாக நாம் பதிவு ஒன்று வெளியிட்டிருந்தோம்.

இன்று 12.06.2018 அதிகாலை 3:15 மணியளவில் மருத்துவமனையிலே மரணமடைந்தார்கள்.

ரஷீத் அலி அவர்களின் மகனின் செல்ஃபோன் எண் : ஜமீர் அலி – 9688031755

அன்னாரின் மறுவாழ்விற்காக பிரார்த்தனை செய்யுங்கள்.

Close