மந்திரம் சொல்ல மறுத்த இஸ்லாமியர்கள் தாக்கப்பட்டனர்!

பாஜக ஆளும் ஜார்கண்டில் கடந்த ஞாயிறு இரவு மௌலானா அஜாருல் இஸ்லாம் மற்றும் அவருடைய சகோதரர் மௌலானா இம்ரான் ஆகியோர் தராவீஹ் தொழுகையை நிறைவேற்றிய பிறகு வீட்டிற்கு சென்றுகொண்டிருந்தனர்.

அது சமயம் வாகனத்தில் வந்த 20-25 நபர்கள் இரண்டு மௌலானாக்களையும் “ஜெய் ஸ்ரீ ராம்” என்று கூறும் படி வற்புறுத்தியுள்ளனர்.

இதனை மறுத்த இரண்டு மௌலானாக்களையும் லத்தியாலும், ஹாக்கி மட்டையினாலும் கடுமையாக தாக்கியுள்ளனர்.

இதில் மௌலானா இம்ரான் காயங்களுடன் தப்பிக்க முயன்றார் அனால் அவரின் சகோதரர் மௌலானா அஜாருல் இஸ்லாம் கொடுரமாக தாக்கப்பட்டதனால் அவரால் முயல இயலவில்லை.

இது முதல்முறை அல்ல கடந்த மே 25ல் மட்டும் 20 இஸ்லாமிய குடும்பங்களை இது போன்ற கும்பல்கள் அச்சுறுத்தியுள்ளனர்.

இந்தியா மதசார்பற்ற தேசம்தானா என்பதில் பெருத்த சந்தேகம் எழுந்துள்ளது.

Close