Adirai pirai
EID SPECIAL islam உள்ளூர் செய்திகள்

அதிரை சாணாவயலில் TNTJ கிளை 3 நடத்தும் நோன்பு பெருநாள் திடல் தொழுகை!

ரமலான் மாதம் நிறைவடைய இருக்கிறது. பிறையின் 15 அல்லது 16 ஆம் தேதி நோன்புப்பெருநாளை நாம் கொண்டாட உள்ளோம். அந்த வகையில் வழக்கம்போல் இந்த ஆண்டு நோன்புப்பெருநாள் திடல் தொழுகையை அதிரை TNTJ சார்பாக 3 இடங்களில் நடைபெறுகிறது. இதில் கிளை 3 சார்பாக மேலத்தெரு சாணாவயலில் மஸ்ஜிதுல் ஹிதாயா எதிர்புறம் உள்ள மைதானத்தில் தொழுகை நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

காலை 7:15 மணியளவில் தொடங்கும் இந்த தொழுகையில் இனாமுல் ஹசன் மிஸ்க் அவர்கள் கலந்துகொண்டு உரையாற்றுகிறார்கள். இதில் பெண்கள் தொழுகைக்காக தனி இட வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.