அதிரையை வலம் வரும் இளம் இமாம்கள்!

நமதூரில் பள்ளி வாசலுக்கு பஞ்சமில்லா ஊர் என்பதனை நாம் அனைவரும் அறிவோம்.

இருப்பினும் தராவீஹ் தொழுகைக்காக பல இடங்களில் வெளியூர்களில் இருந்து அதிகளவில் ஹாபீழ்களை வரவழைப்பது வழக்கமாக இருந்தது சில ஆண்டுகளுக்கு முன்பு வரை.

இது தவறானதல்ல இருந்தாலும் நமதூரில் உள்ள பெரும்பாலான பெற்றோர்கள் சில ஆண்டுகளுக்கு முன்பு வரை படிப்புக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுத்து வந்தனர். இருந்தாலும் குர் ஆன் ஓத அடிப்படை விஷயங்களை கற்றுக்கொடுக்கவும் செய்தார்கள்.

ஆனால் இன்று அல்லாஹ் வின் உதவியோடு பல பெற்றோர்கள் உலக கல்வியோடு மார்க்க கல்வி கற்கவும், சிலர் முழுக்க முழுக்க மார்க்க கல்வி கற்க ஊக்கப் படுத்துகின்றார்கள். பல திறமைமிக்க மார்க்க கல்வியாளர்களுக்கும் இதில் முக்கிய பங்கு உள்ளது.

எங்கு பார்த்தாலும் தொழுகை நடத்த பல இளைஞர்கள் சங்கை மிகு தோற்றத்தில் வலம் வருகின்றார்கள். 12-18 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் 10/15/19… இன்னும் அதிகளவிலும் சிலர் ஜுஷ்களை மனனம் செய்துள்ளனர் பல இளைஞர்கள் முழு குர் ஆன் ஐ மனனம் செய்துள்ளனர்.

காலம் செல்ல செல்ல வழிகேடுகள் அதிகரித்து வரும் சூழலில். இது போன்ற இளைஞர்களால் இந்த சமூகத்திற்கு பல நல்ல ஏற்பாடுகளை அல்லாஹ் ஏற்படுத்துவான். இது போன்ற பல ஹாபீழ்கள் அதிகளவில் உருவாகிவிட வேண்டும் அவர்களை கொண்டு இந்த ஊர் இன்னும் வளம் பெற வேண்டும் இன்ஷா அல்லாஹ்.

– அதிரை சாலிஹ்

Close