அதிரையர்களுக்கு பெருநாள் ஆஃபர் கொடுத்து அதிர்ச்சியளித்த சென்னை ஆம்னி பேருந்துகள்!

தற்போது ரமலான் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. நாளையோ அல்லது நாளை மறுதினமோ பிறையின் அடிப்படையில் நோன்பு பெருநாள் கொண்டாடப்பட உள்ளது. குடும்பத்துடன் நோன்பு பெருநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாட சென்னையிலிருந்து ஏராளமானோர் அதிரைக்கு படையெடுத்து வந்துள்ளனர். சிலர் ரயில் மூலம் முன்பதிவு செய்து அதிரைக்கு வந்திருந்தாலும், பலர் ஆம்னி பேருந்துகளின் மூலமே ஊருக்கு வந்துள்ளனர்.

இந்த சமயத்தை சரியாக பயன்படுத்தி கொள்ளை லாபம் பார்த்துள்ளனர் ஆம்னி பேருந்து நிறுவன உரிமையாளர்கள். வழக்கமாக 430 அல்லது 450 ரூபாய்க்கு கிடைக்கும் பேருந்து டிக்கெட்டுகள் இந்த முறை 500 ரூபாய் தொடங்கி 650 ரூபாய் வரை விற்பனை செய்துள்ளனர். ஆனால், பொதுமக்கள் எப்படியாவது ஊருக்கு போய் சேர்வோம் என்பதால் வேறு வழியின்றி மனக்குமுறகுடன் அதிக கட்டணத்தை கட்டி பேருந்தில் வந்துள்ளனர்.

பெருநாள் வந்து விட்டால் துணிக்கடைகள் தொடங்கி ஒவ்வொரு நிறுவனங்களும் ஆஃபர்களை அளித்தெளிக்கும். அது ஒரு வியாபார உத்தி தான். ஆனால், இந்த பேருந்து நிறுவனங்கள் எப்போதும் வாங்கப்படும் விலையை காட்டிலும் பல நடக்கும் விலையை உயர்த்தி மக்களுக்கு பெருநாள் பரிசை கொடுத்துள்ளனர்.

பல பேருந்து டீலர்கள், டிக்கெட்டுகள் முன்கூட்டியே விற்றுவிட்டதாகவோ அல்லது, சில சொல்லி வைத்திருப்பதாகவோ கூறி இது போன்ற நேரங்களில் டிக்கெட்டுகள் மீது செயற்கையான தட்டுப்பாடுகளை உருவாக்குகின்றனர். இதுவும் பதுக்கல் என்ற வகையில் தான் சேரும்.

இது பற்றி நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:“தேவையான பொருளைப் பதுக்கி வைக்காமல் உரிய நேரத்தில் அவற்றை அங்காடிக்குக் கொண்டு வருபவன் அல்லாஹ்வின் அருளுக்கு உரித்தவனாவான். மேலும் அல்லாஹ் அவனுக்கு வாழ்வாதாரங்களையும் வழங்குவான். இன்னும் அவற்றை பதுக்கி வைப்பவன் அல்லாஹ்வின் சாபத்திற்குரியவனாவான்” என்றுகூறினார்கள்.

-(உமர் (ரலி) இப்னுமாஜா).

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “பாவியைத் தவிர வேறு யாரும் உணவுப் பொருளை பதுக்க மாட்டார்கள்.” என்று கூறினார்கள்.

-(மஃமர் இப்னு அப்துல்லாஹ் (ரலி) முஸ்லிம்).

இந்தப் பதுக்கல்காரனைப் பற்றி நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “தேவையான பண்டங்களைப் பதுக்கி வைப்பவன் எவ்வளவு கெட்டவனாக இருக்கிறான். அல்லாஹ் பொருளின் விலையை மலிவாக்கி விட்டால் இவன் வருத்தப்படுவான். விலை ஏறிவிட்டாலோ மகிழ்ச்சிகொள்கிறான்.” என்று கூறினார்கள்.

-(முஅத் (ரலி) பைஹகீ).

Close