தமிழகத்தில் சனிக்கிழமை நோன்பு பெருநாள் என அறிவிப்பு

உலக முஸ்லீம்களால் இன்று 29 வது ரமலான் நோன்பு நிறைவு செய்யப்பட்டுள்ளது. இஃப்தாரை நிறைவு செய்துவிட்டு பலர் ஷவ்வால் பிறையை தேடினர். ஆனால் தமிழகம் எங்கும் இன்று பிறை தென்படவில்லை. இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக தலைமை காஜி சலாவுதீன் முகமது அயூப், தமிழகத்தில் ஷவ்வால் பிறை தென்படாததால் இந்த ரமலான் 30 ஆக பூர்த்தி செய்யபடும் என்றார். வரும் சனிக்கிழமை நோன்பு பெருநாள் கொண்டாடப்படும் என அவர் அறிவித்தார்.

Close