விசா நடைமுறைகளை எளிமையாக்கியது அமீரகம்!

வெளிநாட்டுத் தொழிலாளர்களின் உரிமையைப் பாதுகாக்கும் வகையில் விசா நடைமுறைகளை எளிதாக்க ஐக்கிய அரபு அமீரக அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

ஐக்கிய அரபு அமீரகத்தின் அமைச்சரவைக் கூட்டம் பிரதமர் சேக் முகமது பின் ரசீது அல் மக்தூம் தலைமையில் நடைபெற்றது. அதில் தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் தொழிலாளருக்கான காப்பீட்டை மூவாயிரம் திராமில் இருந்து அறுபது திராமாகக் குறைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது. அதேபோல் சுற்றுலாப் பயணிகளுக்கும், தங்கிப் பணியாற்றுபவர்களுக்கும், அவர்களின் குடும்பத்தினருக்கும், விசாக்காலம் முடிந்த பின் தங்கியிருப்போருக்கும் விசா நடைமுறைகள் எளிமையாக்கப்பட்டுள்ளன.

பிற நாடுகளில் இருந்து ஐக்கிய அரபு அமீரகம் வழியாக வந்து செல்பவர்களுக்கு முதல் 48மணி நேரத்துக்கு அனைத்து நுழைவுக் கட்டணங்களில் இருந்தும் விலக்களிக்கவும், அதன்பின் 96மணி நேரம் வரை ஐம்பது திராம் கட்டணம் மட்டுமே விதிக்கவும் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.  

நன்றி: பாலிமர் நியூஸ்

Close