Adirai pirai
FLASH NEWS உள்ளூர் செய்திகள்

அதிரை ECR இல் சாலை விபத்து… இளைஞர் படுகாயம்!

அதிரையை சேர்ந்த இளைஞர்கள் இருவர் ராஜாமடத்துக்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது ECR சாலையில் இன்று இரவு இவர்கள் சென்ற பைக்கும் எதிரே வந்த பைக்கும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இதில் பைக்கை ஓட்டி சென்ற இளைஞருக்கு தலையில் படுகாயம் ஏற்பட்டது. உடனடியாக அவர் அதிரை அரசு மருத்துவமனைக்கு முதலுதவி சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக தஞ்சைக்கு கொண்டு செல்லப்பட்டார். பின்னால் வந்த இளைஞர் பைக்கில் இருந்து கீழே குதித்ததில்அவருக்கு கையில் காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

பெருநாள் வந்துவிட்டாலே அதிரை இளைஞர்கள் வேகமாக பைக்குகளில் செல்வதும், விபத்துக்குள்ளாவதும் வாடிக்கையாகி வருகிறது. பெருநாள் இரவிலேயே விபத்து ஏற்பட்டது பலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.