அதிரை APL கிரிக்கெட் தொடர்-தஞ்சாவூர் ஸ்ரீ கணேஷ் அணி வெற்றி!

அதிரை ஃப்ரெண்ட்ஸ் கிரிக்கெட் கிளப் (AFCC)  நடத்தும் பத்தாம் ஆண்டு மாவட்ட அளவிலான கிரிக்கெட் தொடர் போட்டி  நமதூர் ஷிபா மருத்துவமனை எதிரில் உள்ள கிரானி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. கிரிக்கெட் பந்தில் நடைபெறும் இத்தொடரில் அதிரை அணிகள் உட்பட மாவட்ட அளவிலான தலைசிறந்த கிரிக்கெட் அணிகள் விளையாடி வருகின்றன.5ம் நாளான இன்று நாகப்பட்டினம் ஈ.ஜி.எஸ் பிள்ளை கல்லூரி அணியை எதிர்த்து தஞ்சை ஸ்ரீ கணேஷ் அணி விளையாடியது. இதில் தஞ்சாவூர் ஸ்ரீ கணேஷ் அணி வெற்றி பெற்று அசத்தியது. அதிரை APL கிரிக்கெட் தொடர் குறித்த தினசரி பதிவுகளுக்கு இணைந்திருங்கள் அதிரை பிறையுடன்.

Advertisement

Close