Adirai pirai
sports உள்ளூர் செய்திகள்

அதிரையில் கோலாகளமாக தொடங்கிய SSMG கால்பந்தாட்ட தொடர் போட்டி!

அதிரை SSM குல் முஹம்மது நினைவாக கடற்கரைத்தெரு மைதானத்தில் ஆண்டு தோறும் நோன்பு பெருநாள் மாலை கால்பந்தாட்ட தொடர் தொடங்கி நடைபெறுவது வழக்கம். அந்த வகையில், இன்றைய தினம் முதல் நாள் ஆட்டமாக தென்னரசு கால்பந்தாட்ட கழகம் பள்ளத்தூர் அணியினரும் கலைவானன் 7ன்ஸ் கண்டனூர் அணியினரும் மோதினர். இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பள்ளத்தூர் அணி 3-0 என்ற கோல்கணக்கில் அபார வெற்றி பெற்றனர். இந்த போட்டியை காண ஏராளமான கால்பந்தாட்ட அரசிகர்கள் மைதானத்தில் திரண்டிருந்தனர்.