Adirai pirai
exclusive உள்ளூர் செய்திகள்

அதிரை பேரூராட்சி மோட்டார் ரூமில் சாராயம் விற்பனை… கையும் களவுமாக பிடித்த இளைஞர்கள்!

நமதூர் அதிரையில் முத்துப்பேட்டை ஈசிஆர் சாலை, பட்டுக்கோட்டை சாலை, ஏரிக்கரை ஆகிய பகுதிகளில் டாஸ்மாக் கடைகள் அமைந்துள்ளன. இதில் குடித்து விட்டு நாள் தோறும் குடிமகன் கள் விபத்துகளை ஏற்படுத்தி வருகின்றனர். பட்டுக்கோட்டை சாலையில் அமைந்துள்ள மதுக்கடைக்கு அருகே இமாம் ஷாபி ஆண்கள் பள்ளி, இமாம் ஷாபி பெண்கள் பள்ளி, ஷிபா மருத்துவமனை, கிராணி விளையாட்டு மைதானம், லாவண்யா திருமண மண்டபம், கதீஜா திருமண மண்டபம், அதிரை மின்சார வாரியம் உள்ளிட்ட மக்கள் அதிகம் கூடும் தளங்களின் அருகாமையில் உள்ள இந்த மதுக்கடையின் காரணமாக நாள்தோறும் ஏராளமான சாமானிய மக்கள் தொடர் இன்னல்களை சந்தித்து வருகின்றனர். அகற்ற பலர் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் இன்று (16-06-2018) இந்த மதுபான கடை பின்புறம் திருட்டு னமாக பேரூராட்சிக்கு சொந்தமான மோட்டார் நிலையத்தில் மது விற்று வந்ததை இளைஞர்கள் கைகளவுமாக பிடித்தனர். இது குறித்து காவல்துறையிடம் ஒரு வாய்வழி புகார் அளித்து உள்ளோம். முறைகேடாக மது விற்கப்பட்ட இடம் பேரூராட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள இடம்.

இந்த விஷயம் இன்றல்ல, நேற்றல்ல பல மாதங்களாக நடைபெற்று கொண்டு தான் உள்ளது. இந்த விஷயத்தில் பேரூராட்சி இதுவரை நடவடிக்கை எடுக்காததை பார்த்தால் அவர்கள் இதற்கு உடந்தையாக உள்ளனரோ என்ற சந்தேகம் எழுகிறது. எனவே பேரூராட்சி அதிகாரிகள் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது காவல்துறையில் புகார் அளித்து நடவடிக்கைக்கு துணை புரிய வேண்டும்.