Adirai pirai
education and jobs உள்ளூர் செய்திகள்

அதிரை இமாம் ஷாபி பள்ளியில் நடைபெற்ற முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி!

அதிரை இமாம் ஷாஃபி பள்ளி வளாகத்தில் இப்னு ஹைதம் அரங்கம் கட்டி முடிக்கப்பட்டது. இதனை நேற்று மாலை பள்ளி தாளாளர் எம்.எஸ்.தாஜுத்தீன் அவர்கள் திறந்து வைத்தார். அதை தொடர்ந்து அந்த அரங்கில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் காதிர் முஹைதீன் கல்லூரி பேரா.ஜியாவுத்தீன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு முன்னாள் மாணவர்கள் அமைப்பினால் ஏற்படும் பயன்கள் குறித்து விரிவாக பேசினார். அத்துடன் அதிரை இளைஞர்கள் பைக் மோகத்தால் விபத்துக்குள்ளாகி வருவது குறித்தும், போதை பழக்கத்திற்கு அடிமையாகி வருவது குறித்தும் தன்னுடைய கவலையை அவர் வெளிப்படுத்தினார். இதில், முன்னாள் மாணவர்களிடம் பள்ளி முன்னேற்றம் தொடர்பாக கருத்து கேட்கப்பட்டது.

இதையடுத்து முன்னாள் மாணவர்கள் கஸ்வா சாகுல் ஹமீது, சிஸ்யா சலீம், உறவுகள் தொண்டு அமைப்பின் நிறுவனர் காலித், முஃப்தி அப்துல் ஹாதி ஆகியோரின் சிறப்பான சேவைகளை பாராட்டி பொன்னாடை போர்த்தி கவுரவிக்கப்பட்டது. அடுத்த ஆண்டு ஜனவரி 26 ஆம் தேதி முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.