Adirai pirai
articles islam உள்ளூர் செய்திகள்

குட்டி கதை: மத நல்லிணக்கத்தை பிரதிபளிக்கும் நோன்பு கஞ்சி! (வீடியோ)

கடந்த 2017 ஆம் ஆண்டு எடுத்த செய்தித்தொகுப்பு…

நோன்பு திறப்பதற்க்காக வீடுகள் மற்றும் பள்ளி வாசல்களில் காய்ச்சப்படும் கஞ்சி உணவுகளிலேயே சிறப்பு மிக்க எல்லாருடைய மனங்களையும் வென்றெடுத்த உணவு என்று சொன்னால் அது மிகையல்ல. இந்த நோன்பு கஞ்சியை முதல் முதலில் அறிமுகப்படுத்திய நபரை தெரிந்துக் கொள்வோம்.

கடையநல்லூரைச் சேர்ந்த முஹம்மது அலி அவர்களால் 1948 அன்று பர்மா என்று அழைக்கப்பட்ட மியான்மரில் அறிமுகப்படுத்தினாராம். அன்று நோன்பு திறப்பதற்க்காக கடினமான உணவுகளை பயன்படுத்தியதால் செரிமானாம் ஆவதில் பிரச்சனை போக்க அரிசியை போட்டு கஞ்சி காய்ச்சி அதனோடு மசாலா சேர்த்து நோன்பு திறந்து இருக்கின்றார். தான் காய்ச்சிய கஞ்சியை அக்கம் பக்கத்திலும் கொடுத்து நோன்பு திறக்க சொல்ல அதன் படி நோன்பு திறக்கப்பட்டதும் அது சீக்கரமாக செரிமான ஆவதை கண்ட மக்கள், நோன்பு திறப்பதற்க்கு ஏற்றமான உணவாக ஏற்றுகொண்டனர். அது இன்று வரையிலும் நம்மை விட்டு பிரிக்க முடியாத உணவாக போனதை நினைத்து பெருமிதம் கொள்கிறோம்.

அதன் அடிப்படையில் அதிரையில் எல்லா பள்ளிகளிலும் நோன்பு முழுவதும் கஞ்சி சாய்ச்சி பரிமாறப்படுகிறது. சி.எம்.பி.லைனில் உள்ள ஹனீப் பள்ளியில் தினந்தோறும் 2 சட்டி வைத்து 25 படி அரிசி போட்டு அதிகப்படியான 25 தேங்காய் உபயோகித்து சுவை மிக்க கஞ்சியை வினியோகம் செய்தனர். அஸர் தொழுகை முடிந்ததும் கஞ்சி வாங்குவதற்க்காக மக்கள் நீண்ட வரிசையில் நின்று வாங்கிச் சென்றனர். இஸ்லாமிய மக்கள் மட்டுமில்லாமல் மாற்றுமத சகோதர, சகோதரிகளும் இதை அதிகம் வாங்கிச் சென்றனர். அதிகமான பெண்களும் வந்து கஞ்சியை வாங்கி சென்றனர். கஞ்சியை வாங்கிச் சென்றவர்கள் அனைவரும் ஹனீப் பள்ளி கஞ்சியை வெகுவாக பாராட்டினர்.

சில ஆண்டுகளுக்கு முன் பள்ளி வாசலில் கஞ்சி வாங்குவதை கவுரவ பிரச்சனையாக நினைத்த காலம் போய். பள்ளிவாசல் கஞ்சி கிடைக்காதா என்ற காலம் புரண்டு போனதை நினைத்து பிரமித்து போகச் வைத்துள்ளது. அந்த அளவுக்கு எல்லாப் பள்ளிகளிலும் மக்கள் கூட்டம். யார் யார் எல்லாம் தன் ஹாலான செல்வத்தைக் கொண்டு பள்ளிவாசலில் நோன்பு கஞ்சி காய்ச்ச செல்வத்தைக் கொடுத்தார்களோ! அனைவருடைய செல்வத்தில் அல்லாஹ் பரக்கத் செய்வானாக!

ஆக்கம்: அபூபக்கர்