Adirai pirai
education and jobs உள்ளூர் செய்திகள்

வாட்ஸ் அப்பில் பரவும் புகார் செய்திக்கு அதிரை இமாம் ஷாபி பள்ளி நிர்வாகம் மறுப்பு!

அதிரை இமாம் ஷாபி பள்ளியின் நேரம் சரியாக பின்பற்றப்படவில்லை என்பது தொடர்பாக பள்ளி நிர்வாகத்தை கடுமையாக சாடி வாட்ஸ் அப்பில் பதிவு ஒன்று கடந்த 2 நாட்களாக பரவி வந்தது. இது தொடர்பாக பள்ளி நிர்வாகத்திடம் அதிரை பிறை சார்பாக விளக்கம் கேட்டிருந்தோம். அதற்கு பதிலளித்த பள்ளி நிர்வாகம், வாட்ஸ் அப்பில் பரவும் அந்த தகவல் தவறானது எனக்கூறி மறுத்துள்ளது.

8 மணிக்கு பள்ளி தொடங்கப்படவில்லை என்றும், பள்ளியின் தொடக்க நேரம் 8:30 மணி தான் என்றும் தெரிவித்துள்ளனர். LKG, UKG க்கும் 12:20 மணியுடன் பள்ளி முடிவதாகவும், மற்ற மாணவர்களுக்கு 1 மணி முதல் 1:45 மணி வரை மதிய உணவு இடைவெளி விடப்படுவதாகவும், 1 ஆம் வகுப்பு முதல் 9 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு 3:45 மணியுடன் பள்ளி முடிவதாகவும், 10, 11, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 4:45 மணியுடன் பள்ளி முடிவதாகவும் விளக்கம் அளித்துள்ளனர்.

இந்த நிலையில் இது குறித்து இமாம் ஷாபி பள்ளி நிர்வாகம் விளக்கமளித்து நோட்டீஸ் ஒட்டியுள்ளது. அதில், மாணவர்களின் மதிய உணவு முறையாக சென்றடைய உணவு பைகள் வைக்கும் அடுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றும், அதற்காக, வருடத்திற்கு ₹25 செலுத்தி பெயர்களை பதிவு செய்துகொள்ள வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி உணவு பைகள் பள்ளியின் வாயிலில் காலை 11:30 மணி முதல் 12:45 மணி வரை பெற்றுக்கொள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவற்றை பள்ளி ஊழியர்கள் பெற்று உணவு அடுக்கில் வைத்துவிடுவார்கள் என்றும், மாணவர்கள் அதனை பெற்றுக்கொள்வார்கள் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதே போல், பள்ளி மீதான ஆலோசனைகள் மற்றும் புகார்களை எழுத்து வடிவில் கொடுத்தால் 24 மணி நேரத்திற்கு எழுத்து வடிவில் பதிலளிக்கப்படும் என்றும் இமாம் ஷாபி பள்ளி நிர்வாகம் கேட்டுகொண்டுள்ளது.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy