Adirai pirai
Alert உள்ளூர் செய்திகள்

அதிரை நடுத்தெருவில் பீதியை ஏற்படுத்தும் மின் கம்பம்… புகார்களை காதில் வாங்காத மின்வாரியம்!

அதிராம்பட்டினம் நடுத்தெரு கீழ்புறத்தில் உள்ள மின் இணைப்பு எண்745 D பிரிவு மின்கம்பத்தில் உள்ள இரும்பு கம்பிகள் துறு பிடித்து கீழே விழும் ஆபத்தான நிலையில் உள்ளது. பொதுமக்கள், பள்ளி செல்லும் சிறுவர்களின் நடமாட்டம் மிகுந்த இந்த பகுதியில் உள்ள இந்த ஆபத்தான மின் கம்பத்தால் பலர் இவ்வழியாக செல்ல அச்சப்படும் சூழல் நிலவி வருகிறது. அத்துடனிதன் மின் கம்பிகள் தாழ்வாக செல்வதும் அப்பகுதி மக்களுக்கு பீதியை கிளப்பி உள்ளது. இது தொடர்பாக சமூக ஆர்வலர் முஹம்மது ஹாலிக் அவர்கள் கடந்த 6 ஆம் தேதி அன்றே அதிரை உதவி செயற்பொறியாளருக்கு புகார் கடிதம் அனுப்பி இருக்கிறார். இந்த நிலையில், கடந்த 2 நாட்களுக்கு முன்பாக கூட மாதாந்திர மின் பழுதுகளை சீர் செய்வதற்காக அதிரையில் மின்சாரம் நாள் முழுவதும் தடை செய்யப்பட்டது. ஆனால், அந்த சமயத்தில் இந்த புகார் கடிதம் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அதிரை மின் வாரியம் அலட்சியம் காட்டி இருக்கிறது, இதன் மூலம் தெரியவருகிறது.